Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியினருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்: ரவிசாஸ்திரி

In கிாிக்கட்
Published: 06:40 GMT, Jul 13, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Anojkiyan
ravi

இந்திய அணியினருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாராக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

லண்டன் சென்று இருக்கும் ரவிசாஸ்திரி தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இதற்கு முன்பு இருந்த இந்திய அணிகளை விட டெஸ்ட் போட்டியில் தற்போதைய இந்திய அணி தான் மிகவும் சிறப்பானதாகும். இந்திய அணியுடன் இணைந்து மீண்டும் பயணிக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த சூழலிலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். அவர்கள் வேகப்பந்து வீச்சுக்கு பொருத்தமான வயதுடன் உள்ளனர். நான் எப்பொழுதும் சவாலை விரும்பி எதிர்கொள்பவன்.

இந்திய அணியினருடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறேன். மேகமூட்டமாக இருக்கும் தருணத்தில் நடைபெறும் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்டம் செய்வது என்பது சவால் நிறைந்ததாகும். நான் அத்தகைய சவாலை சந்தித்து இருக்கிறேன். அதுபோல் இதுவும் இன்னொரு சவாலாகும். நானும், கங்குலியும் முன்னாள் அணித்தலைவர்கள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் இருந்தாலும், இருவருக்கும் இடையில் பரஸ்பர மரியாதை உண்டு” என கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு ரி-ருவென்ரி போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரிலேயே ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்று செயல்படவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg