Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பருத்தித்துறை இளைஞனின் கொலைக்கு பின்னரான முறைப்பாடுகள்

In இலங்கை
Published: 06:31 GMT, Jul 13, 2017 |
0 Comments
1701
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
thunnalai murder (5)

யாழ். பருத்தித்துறை இளைஞனின் படுகொலைக்குப் பின்னர், அச் சம்பவத்துடன் தொடர்புடைய வகையில் பல்வேறு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

படுகொலைக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தந்தையால், அப்பகுதியிலுள்ள வீடொன்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினரின் வாகனத்திற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெவ்வேறு முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். மணற்காட்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கொலை சம்பவத்தையடுத்து மக்கள் கொதித்துப் போயுள்ள நிலையில், பிரதேசத்தில் தொடர்ந்தும் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg