Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனதளவில் நெருக்கடி- அதிக நேரம் ஓய்வு எடுக்கவிரும்பும் ஜோகோவிச்

In டெனிஸ்
Published: 07:54 GMT, Jul 13, 2017 |
0 Comments
1110
icon_com
This post was written by : Anojkiyan
jok

முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மனதளவில் நெருக்கடி அதிகரித்திருப்பதால் அதிக நேரம் ஓய்வு எடுக்கவிரும்புவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில், உலகின் நான்காம் நிலை வீரரா செர்பியாவின் ஜோகோவிச், 15ஆம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை எதிர் கொண்டார். இதன்போது வலது முழங்கை பகுதியில் வலி ஏற்பட்டதால் போட்டியிலிருந்து ஜோகோவிச் விலகினார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் இவ்வாறு தொடரில் பாதியிலேயே வெளியேறியிருப்பது இரசிகர்களை அதிருபத்தியடையவைத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நோவக் ஜோகோவிச் கூறுகையில், “வலது முழங்கை பகுதியில் வலி அதிகமாக உள்ளது. மனதளவிலும் நெருக்கடி இருப்பதால், அதிக நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். காயம் குணமாக சிகிச்சை தேவைப்படும் என நினைக்கிறேன்” என கூறினார்.

கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற ஜோகோவிச், நடப்பு ஆண்டில் அவுஸ்ரேலிய ஓபனில் இரண்டாவது சுற்றுடன் வெளியேறினார். அத்தோடு பிரெஞ்ச் ஓபனில் காலிறுதியுடன் வெளியேறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg