Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானை கடும் போராட்டத்தின் பின் மீட்பு!

In இலங்கை
Published: 09:09 GMT, Jul 13, 2017 |
0 Comments
1417
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தின் கொக்குத்தொடுவாய் கடல் பகுதியில் கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானையொன்று, 6 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

யானை அடித்துச் செல்லப்படுவதை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்த நிலையில், கடற்படையின் தாக்குதல் படகு சகிதம் மேலதிக படையினர் அனுப்பிவைக்கப்பட்டு குறித்த யானை மீட்கப்பட்டுள்ளது.

பாரிய கயிற்றை யானையைச் சுற்றி கட்டி, அதனை படகுடன் இணைத்து யானை கரைக்கு இழுத்துவரப்பட்டது.

இந்த மீட்பு நடவடிக்கையில் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்துகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) காப்பாற்றப்பட்ட இந்த யானை தேகாரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg