Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெயின் அரச தம்பதியினரின் வருகை பிரித்தானியாவுடனான நட்புறவை வெளிப்படுத்துகிறது: மகாராணி

In
Published: 09:41 GMT, Jul 13, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Risha

ஸ்பெயின் அரச தம்பதியினரின் பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயமானது இரு நாட்டிற்கும் இடையிலான சிறந்த நட்புறவையும், ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என எலிசபெத் மகாராணி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை வந்தடைந்த ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் மற்றும் மகாராணி லெடிஸியா ஆகியோரை வரவேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த மகாராணி, ”நேட்டோ நட்பு நாடுகளாக விளங்கும் எமது இரு நாடுகளும் ஐரோப்பாவிலும், உலகம் முழுவதிலும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறது.

பொதுவான நலன்களை கொண்ட பலம் பொருந்திய நாடுகளாக பிரித்தானியாவும், ஸ்பெயினும் விளங்குகின்ற நிலையில் எதிர்காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளலாம் என்ற உறுதியுடன் நாம் காணப்படுகின்றோம்.

ஸ்பெயின் எமது நாட்டிற்கு இதுவரை வழங்கிய பங்களிப்புகளை நாம் ஆழமாக பாராட்டும் அதேவேளை, எதிர்காலத்தில் எமது நட்பு நீடித்து நிற்கும் என்பதையும் உறுதிபடுத்துகிறேன்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg