Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சைக்குரிய ஜிப்ரால்ட்டர் மண்டலம் குறித்து உரிய தீர்வு எட்டப்படும்: ஸ்பெயின் மன்னர்

In ஐரோப்பா
Published: 10:05 GMT, Jul 13, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Risha

ஸ்பெயினுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகளை தோற்றுவித்த ஜிப்ரால்ட்டர் மண்டலம் தொடர்பில் இரு தரப்பும் ஏற்கத்தக்க வகையிலான தீர்மானம் எட்டப்படும் என நம்புவதாக ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் அரச தம்பதியர் நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த நிலையில், லண்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘எமது வரலாற்றில் நாம் பல விலகல்கள், போட்டிகள் மற்றும் முரண்பாடுகள் என்பவற்றை சந்தித்திருந்தோம்.

ஜிப்ரால்ட்டர் மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இடம்பெற்றுவந்தது. 1713ஆம் ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி ஸ்பெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோரிய போதிலும், இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை. இதனால் இரு தரப்பிற்கும் இடையே சர்ச்சை, விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் பிரித்தானியாவிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஸ்பெயின் பிரஜைகளுக்கு போதுமான உத்தரவாதத்தை பிரித்தானியா ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg