Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவின் அடுத்த ஆளுநராகிறார் முன்னாள் விண்வெளி வீராங்கனை

In கனடா
Updated: 10:34 GMT, Jul 13, 2017 | Published: 10:33 GMT, Jul 13, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Elakkiya
Canadian Space Agency astronaut Payette poses on flight deck of space shuttle Endeavour during flight day three in this NASA handout photo

கனடாவின் அடுத்த ஆளுநராக சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பணியாற்றிய ஜூலி (Julie Payette) நியமிக்கப்படவுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அறிவிப்பை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி நியமனம் குறித்து பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொன்றியலைச் சேர்ந்த 53 வயதாக ஜூலி 6 மொழிகளை பேசக்கூடியவர் என்றும் 18 கௌரவ பட்டங்களை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய விண்வெளி நிறுவன தகவல்களின் பிரகாரம், கடந்த 1996 ஆம் ஆண்டு நாசாவில் இணைந்து கொண்ட ஜூலி, சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இரண்டு பணிகளை திறம்பட செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் மக்ஜில் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் இளங்கலை பட்டமும் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg