Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைக்கல் பார்னியரை சந்தித்தார் ஸ்கொட்லாந்து முதலமைச்சர்

In
Updated: 10:34 GMT, Jul 13, 2017 | Published: 10:34 GMT, Jul 13, 2017 |
0 Comments
1217
This post was written by : Risha

ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியரை பிரஸ்சல்ஸில் சந்தித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றித்திற்கு இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிரெக்சிற் பேச்சாளர் தயாராகி வருகின்ற நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, பிரெக்சிற்-இற்கு எதிராக ஸ்கொட்லாந்து அரசாங்கம் ஒருமித்த கருத்தை வெளியிட விரும்புவதாக நிக்கோலா ஸ்ரேர்ஜனின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் பார்னியர், தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் மற்றும் வேல்ஸ் முதலமைச்சர் கோர்வின் ஜோன்ஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று கருத்து தெரிவித்த பிரெக்சிற் பேச்சாளர், பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்துடன் மாத்திரமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg