Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிகடை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்!

In இலங்கை
Updated: 11:12 GMT, Jul 13, 2017 | Published: 11:10 GMT, Jul 13, 2017 |
0 Comments
1320
This post was written by : Vithushagan

2012ஆம் ஆண்டு வெலிகடை சிறைச்சாலையில் 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெலிக்கடை சிறைச்சாலையில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஏற்பட்ட முரண்பாட்டில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர்.

இது தற்செயலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவிக்கப்பட்டாலும், இது திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டுக்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg