Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா தென்னாபிரிக்கா?

In கிாிக்கட்
Published: 04:31 GMT, Jul 14, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Anojkiyan
padel

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், தென்னாபிரிக்க அணிக்கு டு பிளிசிஸூம் தலைமைதாங்கவுள்ளனர்.

சமீபகாலமாகவே சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திவரும் இங்கிலாந்து அணி, முதலாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றிபெற்றது.

இதனால் இப்போட்டியில் தென்னாபிரிக்க அணி, இங்கிலாந்து அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடரை இழந்துள்ள தென்னாபிரிக்க அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையாவது வெற்றிக்கொள்ள கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg