Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு- கிழக்கின் நிலைமை குறித்து ஆராயவுள்ள மகாநாயக்கர்கள்

In இலங்கை
Updated: 06:02 GMT, Jul 14, 2017 | Published: 05:56 GMT, Jul 14, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Risha
mahanayakas-380-seithy

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் பௌத்த தேரர்மார் அடங்கிய குழுவொன்று குறித்த மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் வடக்கு, கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை உள்ளடக்கிய குழுவினரே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயும் இவ்விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg