Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சென்னை சுப்பர் கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்’- இரசிகர்கள் கொண்டாட்டம்

In கிாிக்கட்
Published: 07:10 GMT, Jul 14, 2017 |
0 Comments
1329
icon_com
This post was written by : Anojkiyan
whk

இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், வலுவான அணியாக கருதப்படும் சென்னை சுப்பர் கிங்ஸ் மீதான தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விசில் போடு… சி.எஸ்.கே. ரிட்டர்ன்ஸ்…’ என பதிவிட்டுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை இன்று நீங்குவதால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டுவருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக சூதாட்டப் புகார் எழுந்ததையடுத்து இரண்டு அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன.

ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை ஐ.பி.எல் சம்பியன், இரண்டு முறை சம்பியன்ஸ் லீக் சம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் தொடரில் இரண்டாம் இடம், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி, தான் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்று ஆதிக்கம் செய்து அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg