Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எந்தவிதமான ஊதியமும் பெறாத கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு பி.சி.சி.ஐ. பாராட்டு

In கிாிக்கட்
Updated: 08:55 GMT, Jul 14, 2017 | Published: 08:55 GMT, Jul 14, 2017 |
0 Comments
1485
This post was written by : Anojkiyan

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை தேர்வுசெய்வதில் எந்தவிதமான ஊதியமும் பெறாத கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு இந்தியக் கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் தாமாக முன்வந்து கிரிக்கெட் சபைக்கு உதவிய சச்சின், கங்குலி மற்றும் விவிஎஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு நன்றி.

பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனைக் குழு எந்தவிதமான ஊதியமும் பெறவில்லை. மேலும் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவரின் ஆலோசனையின் பேரிலேயே இந்திய அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது டிராவிட் துடுப்பாட்ட பயிற்சியாளராகவும், சஹீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர்” என தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg