Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியினர் மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை வேண்டும்: அர்ஜுன

In கிாிக்கட்
Published: 09:39 GMT, Jul 14, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Anojkiyan
arjuna

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இந்த பின்னணியில் தற்போது அர்ஜுனவும் இதே கருத்தை முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து கடந்த கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழுவர் உயிரிழந்ததோடு, ஏழு இலங்கை வீரர்கள் உட்பட 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg