Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘Discover Mannar’ எனும் புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்!

In இலங்கை
Updated: 12:40 GMT, Jul 14, 2017 | Published: 09:39 GMT, Jul 14, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Vithushagan

மன்னாரின் விசேடத்துவத்தைக் குறிக்கும் ‘Discover Mannar’ புகைப்படக் கண்காட்சி இன்று(வெள்ளிக்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை புகைப்படச்சங்கம், இலங்கை வங்கியின் துணை நிறுவனமான சர்வதேச நிதிக்கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் குறித்த கண்காட்சியை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மன்னாரை பிரபல்யப்படுத்தும் நோக்கில் குறித்த கண்காட்சி மன்னாரை நிலைபேறான, பொறுப்பு வாய்ந்த சுற்றுலா மையமாக ஊக்கு விக்கும் வகையில், EU-SDDP நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

கொழும்பில் மே மாதத்தில் இடம் பெற்ற குறித்த புகைப்பட கண்காட்சியில் 300 இற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் திறந்த மற்றும் மாணவர் பிரிவுகள் வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த கண்காட்சியின்போது தமது புகைப்படங்களை சமர்ப்பித்திருந்த மாணவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் பதக்கம் மற்றும் மெரிட் விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள குறித்த கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த நிகழ்வின்போது சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் இணைப்பாளர்  வி.ரி.யோகராஜா, சுற்றுலாத்துறை அதிவிருத்தி திட்ட இணைப்பாளர் எம்.எஸ்.ஏ.சலீம் உள்ளிட்ட மாவட்டச் செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0107 DSC_0129 DSC_0139

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg