Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

In இலங்கை
Published: 10:44 GMT, Jul 14, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Risha

ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்று மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய வேலைத்திட்டம், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, விஷமற்ற சுகாதாரமான விவசாயம், ‘மறுமலர்ச்சி’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம் போன்றன தொடர்பாக அரச திணைக்களகங்களின் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கம் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகளால், மாவட்டத்தின் விவசாயம், சிறுவர் பாதுகாப்பு, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஜனாதிபதி செயலணி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் வன்னி மாவட்ட கருத்திட்டப் பணிப்பாளர் பிரபா கணேசன் தலைமையிலாக ஜனாதிபதி செயலணியின் அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடலில், வவுனியா மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg