Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாகனம் ஒன்றிலிருந்து போதைப் பொருட்கள்-ஆயுதங்கள் மீட்கப்பட்ட விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்

In கனடா
Published: 12:01 GMT, Jul 14, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Anojkiyan
crash-in-High-Park

ரொறன்ரோ ஹை பார்க் பகுதியில் விபத்துக்குள்ளான வாகனம் ஒன்றிலிருந்து போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கொல்போர்ன் லொட்ஜ் ட்ரைவ் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்திலிருந்து தனது வாகனத்தினை வேகமாக பின்னோக்கி நகர்த்திச் சென்ற ஒருவர், அருகே இருந்த மரம் மற்றும் வேலிப் பகுதிகளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மிக மோசமான காயங்களுடன் காணப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விதிமுறைக்கு முரணாக வாகனத்தினை செலுத்தியதாக அவர்மீது குற்றச்சாட்டினையும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், வாகனத்தை பரிசோதித்த பொலிஸார், போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டுள்ளனர். என்ன காரணத்துக்காக குறித்த அந்த நபர் இவ்வாறு மிக வேகமாக வாகனத்தினை பின்னோக்கி நகர்த்திச் சென்றார் என்பது இன்னமும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg