Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸின் தேசிய தின நிகழ்வுகளில் அமெரிக்க ஜனாதிபதி

In ஐரோப்பா
Updated: 12:39 GMT, Jul 14, 2017 | Published: 11:59 GMT, Jul 14, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Elakkiya
fvb

பிரான்ஸின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க துருப்புக்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டுள்ளார்.

பிரான்ஸின் பெருமைகளையும் வீரத்தையும் உலகுக்கு பறைசாற்றும் வகையில் இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. இந்த அணிவகுப்பில் 3720 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 211 இராணுவ வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குதிரைப்படை அணிவகுப்பில் 241 குதிரைகளில் வீரர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர்.

அதேவேளை விமான சாகசங்களில் 63 விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் விமானப்படையைச் சேர்ந்த 49 விமானங்களும் கடற்படையைச் சேர்ந்த 6 விமானங்களும் அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த 8 விமானங்களும் சாகசம் நிகழ்த்தியுள்ளன.அத்துடன் 29 இராணுவ உலங்கு வானூர்த்திகள் சாகசங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg