Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா விவகாரம் : விதிமுறைகளை மீறிய டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீஸ்

In இந்தியா
Updated: 04:46 GMT, Jul 15, 2017 | Published: 04:41 GMT, Jul 15, 2017 |
0 Comments
1837
icon_com
This post was written by : Sujitharan
201707150830094711_Karnataka-DIG-Roopa-says-I-am-confident-with-my-allegation_SECVPF

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகளை செய்து கொடுப்பதற்காக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளுக்கு தாராளமாக போதை பொருட்கள் கிடைப்பதாக, கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி.ஐ.ஜி. ரூபாவும் தான் கொடுத்த குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என, முதலமைச்சர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக மைசூரில் நேற்று முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அவா் இவ்வாறு கூறினார். முதலமைச்சர் ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்தும் கூறுகையில்,

”பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். அதனை விசாரிக்க அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் முறைகேடு நடப்பதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தாலும், அது குறித்து அவர் முதலில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து இருக்கவேண்டும். அதன் பின்னர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கவேண்டும்.

ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. யாருடனும் ஆலோசிக்காமல், அரசின் கவனத்திற்கும் கொண்டு வராமல் ஊடகங்களுக்கு நேரடியாக அறிவித்தமை தவறானது. அவர் தொடா்ந்தும் ஊடகங்களைச்  சந்தித்து பேசி வருதும் சரியானது அல்ல.

பொலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கு என்று விசேட விதிமுறைகள் உள்ளன. ரூபாவின் செயல் விதிமுறைகளை மீறிய செயலாகும். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி டி.ஐ.ஜி. ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்றும் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg