Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய பொலிவுடன் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி

In கிாிக்கட்
Published: 05:36 GMT, Jul 15, 2017 |
0 Comments
1641
icon_com
This post was written by : Anojkiyan
ms-dhoni-csk_806x605_71500039167

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் தடையிலிருந்து மீண்டுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, புதிய பொலிவுடன் களமிறங்கவுள்ளது.

இதுகுறித்து சென்னை அணியின் தலைவர் டோனியுடன் கலந்துரையாட, சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பில் சென்னை அணி நிர்வாகம் தெரிவிக்கையில், ‘ஐ.பி.எல் போட்டிகளில் அணிக்கு ஒரு வீரரை தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறினால் நாங்கள் கண்டிப்பாக டோனியை தான் எங்கள் அணியில் தக்க வைத்து கொள்ளுவோம்.

இது குறித்து நாங்கள் இன்னும் டோனியிடம் எதுவும் ஆலோசனை நடத்தவில்லை. விரைவில் இது குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர்கள் டோனியை சந்தித்து பேச உள்ளோம். எங்களுக்கு, விசுவாசம் மிகவும் முக்கியம். இது தான் எங்கள் அணிக்கு இவ்வளவு ஆண்டுகளில் பெரிய பலமாக இருந்தது’ என தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg