Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஓகஸ்டில்!

In சினிமா
Published: 05:49 GMT, Jul 15, 2017 |
0 Comments
1829
icon_com
This post was written by : Surenth
Merasal

‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டரும் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்லியின் இயக்கத்தில் `மெர்சல்’ திரைப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்து வரும் 61ஆவது திரைப்படமான ‘மெர்சல்தி’ ரைப்படத்தின் இரண்டு பெஸ்ட் லுக் போஸ்டர்கள் விஜய் பிறந்தநாளில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது போஸ்டரையும் வெளியிட, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கும் அட்லி, முதல் இரண்டு போஸ்டர்களையும் மிஞ்சும் விதத்தில் வித்தியாசமான கோணத்தில் மூன்றாவது போஸ்டரை வடிவமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜய்யுடன் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே களமிறங்கி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg