Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

In உலகம்
Published: 05:49 GMT, Jul 15, 2017 |
0 Comments
1318
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம், தேசிய துப்பாக்கிச் சங்கத் தலைமையகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நீதித்துறை வரை  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் நிறம், பெண்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மீதான வன்முறையை தூண்டும் வகையில் தேசிய துப்பாக்கிச் சங்கம் செயற்படுவதாக மேற்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தினால் அமெரிக்காவில் அதிகரித்து வரும் உயிரிழப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பது தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 33,594 பேர் துப்பாக்கி வன்முறை காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg