Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைமைக் காரியாலயம் மட்டக்களப்பில் திறப்பு

In இலங்கை
Updated: 05:40 GMT, Jul 15, 2017 | Published: 05:40 GMT, Jul 15, 2017 |
0 Comments
1306
This post was written by : Risha

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைமைக் காரியாலயம் மட்டக்களப்பில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டினால் திறந்துவைக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், கிழக்கில் ஒவ்வொரு மாவட்டங்களில் காணப்படும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை இலங்கை சுற்றுலாத்துறையின் கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக மாற்றுவதே முதலமைச்சரின் பிரதான நோக்கமாகும். இதனடிப்படையில், அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகமானது கிழக்கு சுற்றுலாசார் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான அலுவலகமாகவும் செயற்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஆர்.ஞானசேகர் தலைமையில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழா நிகழ்வில், மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம்.நசீர், கே.துரைராஜசிங்கம் மற்றும் பிரதி அவைத் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக், மா.நடராஜா, கே.கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg