Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாத்ரீகா்கள் மீதான தாக்குதல் : அனைத்து கட்சிகள் அவசர சந்திப்பு

In இந்தியா
Published: 05:53 GMT, Jul 15, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Sujitharan

இந்திய எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினையடுத்து, மோடி தலைமையிலான அரசாங்கம் எதிரக்கட்சிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அமர்நாத்தில் இருக்கும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்கு சென்ற யாத்ரீகர்கள் மீது, காஷ்மீர் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டதுடன், இந்திய சீனா எல்லையிலும் சற்று பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலைமையினையடுத்து, மோடி அரசின் உயர்மட்ட அதிகாரிகள் அமைச்சர்கள், இந்திய எதிரக்கட்சித் தலைவர்களை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று, நிலைமைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

இதன்போது, எல்லையின் பாதுகாப்பு, யாத்ரீகர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக துருப்புக்களை அனுப்புவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg