Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் தொடரும் வாள்வெட்டு அட்டகாசம்: நால்வர் படுகாயம்

In இலங்கை
Updated: 06:07 GMT, Jul 15, 2017 | Published: 06:07 GMT, Jul 15, 2017 |
0 Comments
1623
This post was written by : Risha

யாழ். ஈச்சமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவமானது ஆவா குழுவுடன் தொடர்புடைய சந்தேகநபர்களினாலேயே முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியாகியுள்ளது.

யாழ்;ப்பாணம் ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதியில் உள்ள யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளரது வீட்டிற்குள்ளும், அருகிலிருந்த மற்றுமொரு வீட்டினுள்ளும் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்தவர்களை தாக்கியதுடன், வீட்டு உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். தாக்குதலில் யாழ்.மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர், அவரது மகள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg