Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கவலை

In சினிமா
Published: 07:13 GMT, Jul 15, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Surenth
Suseenthiran

தன்னுடைய திரைப்படங்களை எந்த விருதிற்கும் தேர்வு செய்யாதமைக்கு இயக்குனர் சுசீந்திரன் கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆறு வருடங்களின் பின்னர் தமிழக அரசு திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், மொத்தமாக 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த விருது அறிவிப்பில் கமல், ரஜினி, அஜித், விஜய் உள்பட முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் இந்த விருது வழங்கும் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விருது அறிவிப்புக்கு பிரபல இயக்குனர் சுசீந்திரன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இதில் என்னுடைய திரைப்படங்களை எந்த விருதிற்கும் தேர்வு செய்யப்படாததிற்கு தேர்வு குழுவினர்களுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பாக, தேசிய விருது பெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ மற்றும் அனைவராலும் பாராட்டை பெற்ற ‘நான் மகான் அல்ல கிளைமாக்ஸ் ஃபைட்டுக்கு அனல் அர்சுவை தேர்வு செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

விருதுகள் பெற இருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg