Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் மேலும் 7,000 பேர் பணி நீக்கம்

In ஐரோப்பா
Updated: 10:59 GMT, Jul 15, 2017 | Published: 08:25 GMT, Jul 15, 2017 |
0 Comments
1383
icon_com
This post was written by : Sylviya

துருக்கியில் கடந்த வருடம் முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் 7,000 க்கும் மேற்பட்ட பொலிஸார், அரச ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சதிப்புரட்சி நடத்தப்பட்டு இன்றுடன் (சனிக்கிழமை) ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நேற்று மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை தொடர்பில் நேற்று அங்காராவில் இருந்து உரையாற்றிய ஜனாதிபதி எர்டோகன், “பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பில் எல்லோரும் கேள்வியெழுப்புகின்றார்கள். இதற்கு பிறகு அவர்கள் எவ்வாறு வாழ்க்கையை கொண்டு செல்வார்கள் என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. நாம் அவர்களை நன்றாகவே கவனித்தோம். ஆனால் அவர்கள் எமக்கு துரோகம் செய்து விட்டார்கள். அவர்கள் தனியார் துறையில் இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

குறித்த சதிப்புரட்சிக்கு அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் மதகுரு பெத்துல்லா குலெனே காரணம் என துருக்கி குற்றஞ்சாட்டி வருகின்றது.

இருப்பினும், அந்தக் குற்றச்சாட்டை பெத்துல்லா குலென் முற்றாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, குறித்த சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரை 150,000 க்கும் மேற்பட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு 50,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg