Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முக்கொலைச் சந்தேக நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை

In இந்தியா
Published: 08:24 GMT, Jul 15, 2017 |
0 Comments
1335
icon_com
This post was written by : Sujitharan
jail-man-702x336

முக்கொலை சந்தேக நபருக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கி, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் நீதிமன்று தீரப்பளித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற முக்கொலை தொடா்பில், விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சந்தேகநபரான விவசாயி குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் நேருநகர் வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்த 35 வயதான ராமசந்திரன் என்ற விவசாயிக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளதுடன், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி அதிகாலையில் சாத்தனூர் கொள்ளை கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலை, அவரது மனைவி சென்னம்மாள் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஆகியோரை ராமசந்திரன் கத்தியால் வெட்டி படுகொலை செய்தார்.

சம்பவம் தொடர்பில் சாத்தனூர் பொலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணைகள் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் மன்றில் நடைபெற்று வந்தன.

இந்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்த குற்றத்திற்காக ராமசந்திரனுக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு வழங்கினார். இந்த தண்டனையை ஆயுட்காலம் முழுவதும் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளார்.  

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg