Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் குடியேறாதவர்களின் காணிகள் மீளப்பெறப்படும்: மயூரன்

In இலங்கை
Published: 08:58 GMT, Jul 15, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Ravivarman

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் குடியேறாதவர்களின் காணிகளை மீட்டு காணி அற்றவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட.மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம் பகுதியில் பல வருடகாலமாக குடியேறாமல் இருக்கும் காணிகளை தெரிவு செய்து காணியற்றவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளரிற்கு அறிவித்துள்ளேன்.

அப்பகுதியில் காணிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் அங்கு சென்று குடியேறாமல் அப்பகுதிகள் காடுவளர்ந்து யானைகள், திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்டம் பகுதியில் பலர் காணியினைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்தபோதும் தற்போது அப்பகுதயில் 45 குடும்பங்களே வசித்து வருவதாக ஓமந்தை கிராம அலுவலர் திருமதி அ. அனுசியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது” என செந்தில்நாதன் மயூரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg