Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான நடமாடும் சேவை!

In இலங்கை
Published: 09:22 GMT, Jul 15, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Ravivarman

‘குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்’ என்ற விசேட திட்டத்தின் கீழ் நடைபெறும் 6 ஆவது நடமாடும் சேவையினை இன்று (சனிக்கிழமை) தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை திருகோணமலையில் நடாத்தியிருந்தது.

இந் நடமாடும் சேவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், சபையின் பணிப்பாளர் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேரடியாக மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சீறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேச மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்காக நீர்ச்சுத்திகரிப்பு இயந்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், குழாய்நீர் விநியோக இணைப்பைப் பெற்றுக்கொள்ள பொருளாதார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச இணைப்புகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் பாடசாலை, வைத்தியசாலை, மதஸ்தாபனங்கள் முதலான பொது இடங்களுக்கு நீரைச் சேமித்து வைக்கக்கூடிய 30 நீர்த்தாங்கிகளும் அதற்கான உபகரணங்களும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், திருகோணமலை மாவட்டத்திலும் டெங்கு நோய் தொற்று நோய் காணப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியேற்படுத்தும் நோக்கில் கட்டில், மெத்தை என்பன கையளிக்கப்பட்டதுடன், பொது சுகாதார வசதியற்ற குடும்பங்களுக்கு கழிவகற்றல் வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு 75 குடும்பங்களுக்கு நிதி உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், வீதியபிவிருத்தி அமைச்சர் ஆரிய கலபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப், துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

09 08 05 03

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg