Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நெல்லை கடுகதி ரயில் சேவை திருவானந்தபுரம் வரையில் நீடிப்பு

In இந்தியா
Updated: 09:30 GMT, Jul 15, 2017 | Published: 09:28 GMT, Jul 15, 2017 |
0 Comments
1047
icon_com
This post was written by : Sujitharan
201707151050191846_intercity._L_styvpf

திருச்சியிலிருந்து புறப்படும் நெல்லை கடுகதி ரயில் சேவை திருவானந்தபுரம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கடுகதி சேவையினை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பச்சைக் கொடி அசைத்து இன்று உத்தியோகபூா்வமாக ஆரம்பித்து வைத்தார்.

திருச்சி – நெல்லை இடையே கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் கடுகதி ரயில் சேவை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், அது தற்போது திருவானந்தபுரம் வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிக அளவில் பயணிகள் பயன்பெறுவார்கள் என்றும், இதற்காக தமிழக மக்கள் சார்பில் மத்திய மந்திரி சுரேஷ் பிரபுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விழாவில் ரயில்வே திணைக்கள பொதுமேலாளர் ரெட்டி மற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg