Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

28 வது வீர மக்கள் தினம் எழுச்சிபூர்வமாக அனுஷ்டிப்பு!

In இலங்கை
Published: 10:23 GMT, Jul 15, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Ravivarman

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 வது வீர மக்கள் தினம் நிகழ்வு மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் எழுச்சிபூர்வமாக இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் இ.அமிர்தலிங்கம், 1989 ஆண்டு யூலை 13 ம் திகதி உயிர்நீத்த திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் க. உமாமகேஸ்வரன், உயிர் நீத்த 16 ம் திகதி வரையிலான தினங்களை தம் இன்னுரை ஈய்ந்த கழக உறுப்பினர்கள் அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூரும் வகையில் வீர மக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் க.கேசவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.துரைரெட்ணம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி உயிர்நீத்த போராளிகளின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பூ மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

SAM_8467 SAM_8466 SAM_8457

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg