தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு ‘அம்மா இ-கிராமம்’: முதலமைச்சர் அறிவிப்பு

தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து சேவைகளுடன் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு ‘அம்மா இ-கிராமம்’ உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று (வெள்ளிக்கிழமை) 110ஆவது விதியின் கீழ் துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்போதே இதனையும் அறிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘அம்மா இ-கிராமம்’ என ஒரு கிராமம் தெரிவு செய்யப்படும். அந்த கிராமத்துக்கு தகவல் தொழில்நுட்ப வசதியை கொண்ட வைஃபை, ஸ்மார்ட் தெருவிளக்குகள், டெலி மருத்துவம், கல்வி போன்ற சேவைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.