புதிய கற்பகபுர காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: பிரதேச செயலாளர்

வவுனியா புதிய கற்பகபுர காணிப்பிரச்சினை தொடர்பாக இங்கு குடியிருக்கும் 97 பேரையும் அழைத்து கலந்துரையாடி இதற்கான முடிவெடுக்கப்படும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார்.
வவுனியா பிரதேச செலயக அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செலயக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய கற்பகபுர காணிப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டபோதே பிரதேச செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எம்மால் வழங்கப்பட்ட விபரங்களில் உள்ள அனைவருக்கும் விட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. அத்துடன் பிரதேச செயலகத்தால் காணி வழங்கப்பட்ட உரிமையாளர்கள் சிலர் வவுனியாவில் வாழ்கின்றனர். இவர்களின் காணிகளில் வேறு சிலர் அத்துமீறி குடியேறியுள்ளனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் வீட்டிற்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாமை தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் 97 பேரையும் அழைத்து கலந்துரையாடி இதற்கான முடிவெடுக்கப்படும் என வவுனியா பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார்.