Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டர் சிக்கன்

In
Updated: 12:45 GMT, Jul 15, 2017 | Published: 12:45 GMT, Jul 15, 2017 |
0 Comments
1267
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள் 

சிக்கன் – 1 கிலோ
கெட்டியான தயிர் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சிவப்பு தந்தூரி கலர் – அரை டீஸ்பூன்
தக்காளி – 4
வெந்தயம் – அரை டீஸ்பூன்
தக்காளி சோஸ் – 4 டேபிள் ஸ்பூன்
க்ரீம் – 1 கப்
முந்திரி – சிறிது
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முந்திரியை பேஸ்ட் செய்து கொள்ளவும். தயிரில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சிக்கனில் கலந்த மசாலாவை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு பிறகு, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற பாத்திரதத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்து, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து வெண்ணெயை போட்டு, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும். எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சோஸ் ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியாக அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg