Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் சிறைச்சாலை உத்தியோகத்தர் பணிநீக்கம்!

In இலங்கை
Published: 13:08 GMT, Jul 15, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Ravivarman
images

யாழ்.சிறைச்சாலையில் உள்ள கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) தொலைபேசியைக் களவாக சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றவேளையே சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தரே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg