Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெஹிவளைப் பகுதி வீடொன்றில் பெறுமதியான பொருட்கள் திருட்டு!

In இலங்கை
Updated: 02:52 GMT, Jul 16, 2017 | Published: 13:50 GMT, Jul 15, 2017 |
0 Comments
2078
icon_com
This post was written by : Varothayan
theft123

தெஹிவளை – வைத்யா வீதியின் குறுக்கு ஒழுங்கை ஒன்றில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் பெறுமதியான தொலைபேசிகள் உட்பட பணமும் திருடப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் வேலை பார்க்கும் 5 தமிழ் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே இந்த துணிகரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்கள் கொழும்பில் உயர்கல்வி கற்ற காலம் தொடக்கம் அவ்வீட்டில் வசித்து வருவதுடன், குறித்த ஒழுங்கைப் பகுதியில் இதுவரை காலமும் எவ்வித திருட்டுச் சம்பவங்களும் இடம்பெறாததால் வழக்கம் போன்று அவர்கள் சாதாரணமாக கதவை பூட்டிவிட்டு நித்திரைக்குச் சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு முன்னால் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காணொளியில் அதிகாலை 4.40 மணியளவில் திருடன் வீடு நோக்கிச் செல்வதும் 5.07 மணியளவில் வெளிச்செல்வதும் பதிவாகியுள்ளது. ஆனால், முகத்தை மூடியபடி திருடன் செல்வதால் தெளிவாக ஆள் அடையாளம் காணமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கமாகவே நள்ளிரவில் வேலை முடிந்து வந்து தூங்குவதால், குறித்த அதிகாலை நேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாக வீட்டார் தெரிவித்துள்ளதுடன், காலையில் எழுந்து பார்க்கும் போது மணிப்பைகள் (பேர்ஸ்) கதவுக்கு வெளியே கிடந்தபோதே திருட்டு இடம்பெற்றதை உணர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

திருடப்பட்ட பொருட்களில் ஒரு ஐ-போன்-7, ஒரு ஐ-போன்-6, ஒரு ஐ-போன்-5எஸ், மற்றும் சாதாரண இரண்டு தொலைபேசிகள் மற்றும் ஐவரின் மணிப்பைகளில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg