Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு சந்தர்ப்பமில்லை: சித்தார்த்தன்

In இலங்கை
Updated: 15:58 GMT, Jul 15, 2017 | Published: 14:59 GMT, Jul 15, 2017 |
0 Comments
1941
icon_com
This post was written by : Ravivarman
Sithadthan-720x480

மிகவும் பலம் பொருந்திய தமிழீழ விடுதலைப்புலிகளால் சாதிக்க முடியாத ஒரு விடயத்தை இனிமேலும் சாதிக்க முடியாது. ஆகவே மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு சந்தர்ப்பமில்லை என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 28 ஆவது வீர மக்கள் தினம் நிகழ்வு மட்டக்களப்பு பல நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிலவேளை நாங்கள் ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் முற்று முழுதாக தமிழினத்தை பேரினவாதிகள் அழித்துவிடலாம் ஆகவே தமிழீழம் ஒரு தீர்வாக இருக்கமுடியாது.

இந்தியாவுடைய அரசியல் சர்வதேச அணுகுமுறை அதேபோன்ற உலகினுடைய அணுகுமுறை தமிழீழத்தை பிரிப்பது என்றால் அவர்களுக்கு என்ன இலாபம் என்பதை கணக்கிடுவார்களே தவிர எங்களுக்காக நிச்சயமாக செய்ய மாட்டார்கள் என நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

எங்களுடைய தோல்விகளுக்கு அதுவும் ஒரு காரணம் இன்று பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் ஒரு பலவீனமான சமூகமாக ஆக்கப்பட்டுள்ளோம்.

ஆகவே நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு சாத்வீக போராட்டங்கள், பேச்சுவார்த்தைகளில் இருந்து தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்கவேண்டும்” என தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg