Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியில் ஏற்பட்ட பிளவினால் பூமிக்கு இரையாகிய இரண்டு கட்டடங்கள்: அமெரிக்காவில் சம்பவம்

In
Published: 01:58 GMT, Jul 16, 2017 |
0 Comments
1468
icon_com
This post was written by : Anojkiyan

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டடங்கள் பூமியில் புதைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிறியதாக ஏற்பட்ட பிளவு சிறிது நேரத்தில் பெரியதாகியதாகவும், அருகில் உள்ள ஏரி வரை இந்த பாதிப்பு நீளும் அபாயம் காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது பிளவு நின்றிருப்பதைத் தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg