Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது திரிணாமுல் (2ஆம் இணைப்பு)

In
Updated: 09:07 GMT, Jul 16, 2017 | Published: 04:22 GMT, Jul 16, 2017 |
0 Comments
1132
This post was written by : Varshini
trinamool_Congress_flag.svg

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரத்திற்கு பா.ஜ.க.வின் சதியே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இன்றைய அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இதன் தாக்கம், நாளைய மழைக்கால கூட்டத்தொடரில் எதிலொலிக்கலாமென கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிக்கும் வகையிலேயே இன்றைய கூட்டம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி கூட்டம் இன்று

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் தற்போது சூடுபிடித்துள்ள ஜி.எஸ்.டி. வரி விவகாரம், மாட்டிறைச்சி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நாளைய கூட்டத்தொடரில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்ற நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)