Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காதலியின் முத்தத்தால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த ஓட்டப் பந்தய வீரர்!

In விளையாட்டு
Updated: 05:08 GMT, Jul 16, 2017 | Published: 04:54 GMT, Jul 16, 2017 |
0 Comments
1277
icon_com
This post was written by : Anojkiyan
gil

பிரேசிலில் நடைபெற்ற றியோ ஒலிம்பிக் தொடரில் 4 x 400 தொடர் ஓட்டத்தில், தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க ஓட்டப் பந்தய வீரர் கில் ரொபர்ட்ஸ், தன் தங்கப்பதக்கத்தை இழந்ததற்கான அதிர்சிகரமான காரணம் வெளியாகியுள்ளது.

அதாவது, தனது காதலியான அலெக்ஸ் சலாசருக்கு முத்தம் கொடுத்ததன் காரணமாகவே அவர் தன் தங்கப்பதக்கத்தை இழக்க நேரிட்டதாக அமெரிக்காவின் ஊக்கமருந்து தடுப்பு மையம் விளக்கமளித்துள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்தான புரொபெனெசிட்யை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கில் ரொபர்ட்ஸின் பதக்கம் பறிக்கப்பட்டது. அத்தோடு கடந்த மே மாதம் 5ஆம் திகதியிலிருந்து ரொபர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.

இதற்கிடையே இவருடைய வழக்கு அமெரிக்காவின் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவர் வேண்டுமென்றே பயன்படுத்தவில்லை என்று தடையை நீக்கியுள்ளது. அத்தோடு அமெரிக்காவின் ஊக்கமருந்து தடுப்பு மையம், இதற்கு விளக்கமளித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதில், ‘ரொபர்ட்ஸிற்கு பரிசோதனை மாதிரி எடுப்பதற்கு முன்பு தனது காதலிக்கு முத்தம் கொடுத்துள்ளாா். காதலியான சலாசர் மருத்த தேவைக்காக புரொபெனெசிட்டை பயன்படுத்தியுள்ளார்.  இதனால் ரொபர்ட்ஸின் உடலிலும் அந்த மருந்து சேர்ந்துள்ளது’ என தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க டிரக் மற்றும் பீல்ட் சம்பியன்ஷிப் தொடரில் 400 மீட்டர் ஓட்டத்தில் 2வது இடம் பிடித்துள்ள ரொபர்ட்ஸ், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெற இருக்கும் உலக சம்பியன்ஷிப்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg