Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வித்துறையை நவீனமயமாக்குவேன்: ராம்நாத் கோவிந்த்

In இந்தியா
Published: 04:42 GMT, Jul 16, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
ramnath kovind

நாட்டின் கல்வித்துறையை நவீனமயமாக்குவதற்கும் இளைஞர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பேன் என பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி பதவியின் கண்ணியத்தைக் காக்க தம்மாலான சகல விடயங்களையும் மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மராட்டியத்தைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று (சனிக்கிழமை) மும்பையில் சந்தித்து ஆதரவு கோரியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இன, மத, மொழி வேறுபாடின்றி, சகல மக்களும் சமமான நீதியை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg