Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

தனி மாநில கோரிக்கை: டார்ஜிலிங்கின் இயல்பு நிலை பாதிப்பு

In
Published: 05:39 GMT, Jul 16, 2017 |
0 Comments
1141
This post was written by : Varshini

தனி மாநிலம் கோரி கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் காரணமாக, இந்தியாவின் கிழக்கு மலைப் பிரதேசமான டார்ஜிலிங்கின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இமாலய கலாசாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோர்கலாந்தை தனி மாநிலமாக்குமாறு கோரி, நேபாள மொழி பேசும் கோர்க்கா அமைப்பினர் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் அமைப்பினர் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் போது, பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பாடசாலைகளிலும் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும் என்று மேற்கு வங்க கல்வியமைச்சர் பார்தா சட்டர்ஜி அறிவித்ததை தொடர்ந்தே இவ் அமைப்பினரில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) முதல் உண்ணாவிரத போராட்டமாக தமது ஆர்ப்பாட்டத்தை மாற்றவுள்ளதாக மோர்ச்சா அமைப்பினர் தெரிவித்திருந்த போதிலும், நாளைய ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோர்கலாந்து தொடர்பான கோரிக்கை பல தசாப்த காலமாக நீடித்து வருகின்றது. கோர்கலாந்தை தனி மாநிலமாக்குமாறு கோரி கடந்த 1980ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தின் போது, சுமார் 1200 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)