Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வலுக்கிறது ஜம்மு – காஷ்மீர் போராட்டம்: இளம் துருப்புக்கள் இணைப்பு

In இந்தியா
Updated: 06:04 GMT, Jul 16, 2017 | Published: 06:04 GMT, Jul 16, 2017 |
0 Comments
1338
This post was written by : Varshini

புதிதாக ராணுவப் பயிற்சி பெற்ற 251 இளம் துருப்புகள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் காலாட்படையில் இணைந்து பணியாற்ற இவர்கள் நேற்று (சனிக்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதோடு, இவர்களின் அணிவகுப்பு மரியாதை ஸ்ரீநகரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஜம்மு – காஷ்மீரில் வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ளும் முனைப்பிலேயே குறித்த துருப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான புர்கான் வானி, கடந்த வருடம் ஜூலை மாதம் அரச படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதோடு, இன்னும் அங்கு பதற்றமான சூழலே நிலவி வருகின்றது.

இதேவேளை, காஷ்மீர் பொலிஸ் பதுங்கு குழியை அண்மையில் தீவிரவாதிகள் தாக்கியழிக்க முற்பட்டபோது, ஏழு யாத்திரீகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப் புதிய துருப்புக்களின் இணைப்பானது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் என நம்பப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg