Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக ரயில் சேவைகள் விரைவில் வழமைக்கு திரும்பும்!

In இலங்கை
Published: 06:37 GMT, Jul 16, 2017 |
0 Comments
1166
icon_com
This post was written by : Vithushagan

தடைப்பட்டுள்ள மலையகத்துகான ரயில் சேவைகள் இன்னும் 3 வாரத்தில் வழமைக்கு திரும்பும் என ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பதுளை பிரதான புகையிரத பாதையில் கொட்டகலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் கடந்த 13ஆம் திகதி அதிகாலை 60 அடி பாலத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

விபத்தில் பழுதடைந்த பயணிகள் பெட்டிகளை தண்டவாளத்திலிருந்து சீர்செய்து அனுப்பியுள்ளதாகவும், எனினும் பாலத்தை புனரமைப்பதற்கு இன்னும் 3 வாரங்கள் எடுக்கும் எனவும் ரயில் போக்குவரத்து புனரமைப்பிற்கான பொறியியலாளர் ரஞ்சித் விஜயசிரி தெரிவித்துள்ளார்

DSC03349 DSC05881

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg