Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமர்நாத் பயங்கரவாத தாக்குதல்: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

In இந்தியா
Updated: 07:22 GMT, Jul 16, 2017 | Published: 06:55 GMT, Jul 16, 2017 |
0 Comments
1235
This post was written by : Varshini

அமர்நாத் யாத்திரையின் போது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தாக்குதலில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த லலிதா (வயது – 47) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திலுள்ள அமர்நாத் பனிக்குகையில் தானாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக சென்ற யாத்திரீகர்கள் மீது கடந்த 10ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் பதுங்குகுழியை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்ட போதே, யாத்திரீகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாக்குதலையடுத்து பாதுகாப்பு பலமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg