Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெட்ஸ்விக் விமான நிலையத்தில் எயார் பிரான்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

In
Updated: 10:08 GMT, Jul 16, 2017 | Published: 07:50 GMT, Jul 16, 2017 |
0 Comments
1394
icon_com
This post was written by : Sylviya
08

விமானத்தில் புகை பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, எயார் பிரான்ஸ் விமானம் ஒன்று கிளாஸ்கோவில் உள்ள பிரெட்ஸ்விக் விமானநிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(சனிக்கிழமை) பகல் 01.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 777 – 200 ரக விமானம் ஒன்றே மேற்படி தரையிறக்கப்பட்டதாகவும் குறித்த விமானத்தில் மொத்தம் 294 பயணிகள் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பிரெட்ஸ்விக் விமான நிலையத்தில் இருந்த பயணிகளை வான்கூவருக்கு அனுப்பும் பொருட்டு மற்றுமொரு எயார் பிரான்ஸ் விமானம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg