Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

விவசாயிகள் நலன் தொடர்பில் உத்தவ் தாக்கரே அக்கறை!

In
Updated: 08:36 GMT, Jul 16, 2017 | Published: 08:30 GMT, Jul 16, 2017 |
0 Comments
1110
This post was written by : Varshini
Uddhav-650

நாட்டின் அபிவிருத்தி பணிகளில் அக்கறை கொண்டுள்ளபோதும், அதன் மூலம் விவசாயிகள் பாதிப்படையக் கூடாதென்பதில் சிவசேனா உறுதியாக உள்ளதென அவ் அமைப்பின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை நாக்பூர் நகரங்களை இணைக்கும் 700 கிலோமீற்றர் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே உத்தவ் தாக்கரே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

இத் திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளின் குறைபாடுகளை கேட்டறிவதோடு, அரசின் கொள்கைகளை ஏற்று விவசாயிகள் திருப்தி அடைந்தால் மட்டுமே அந்த நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென இத்திட்டத்திற்கான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேக்கு அறிவுறுத்தியிருந்ததாக குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, அதனை விடுத்து வளமான நிலத்தை ஒப்படைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டாலோ அல்லது நட்டஈடு வழங்கப்படாமல் விட்டாலோ தம்மிடம் வந்து குறைகளை கூறுமாறு விவசாயிகளுக்கு கூறியுள்ளார்.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)