Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீர்திருத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் குறித்து டோனி பிளேயர் கருத்து

In
Published: 10:00 GMT, Jul 16, 2017 |
0 Comments
1334
icon_com
This post was written by : Sylviya

சீர்திருத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா இருக்கலாம் எனவும் அது சிறந்த அனுகூலங்களை கொண்டு வரும் எனவும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பி.பி.சிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினின் வழிகாட்டலில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டால் அது பிரித்தானியாவை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா முற்றாக விலகுவது, தனிச்சந்தையில் இருந்தும் பிரித்தானியா விலகுவது மற்றும் அதிக செலவீனங்களைக் கொண்ட திட்டம் ஒன்றை தொழிற்கட்சி முன்வைத்திருப்பது ஆகிய விடயங்களை நோக்கும் போது, அது பிரித்தானியாவிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் தடையற்ற சுதந்திர பெயர்வு உறுதி செய்யப்படாமல் ஒற்றைச் சந்தையில் பிரித்தானியா இடம்பிடிக்க வாய்ப்பில்லை என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சீர்த்திருத்தம் செய்யப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பில் பிளேயர் கருத்து தெரிவித்திருப்பது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

2007 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த பிளேயர், ஐரோப்பிய ஒன்றித்தில் பிரித்தானியா இருப்பதே சிறந்தது எனும் கொள்கையை கடைபிடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg