Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

In இலங்கை
Published: 09:42 GMT, Jul 16, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Ravivarman
DSC00218

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவிச் செயலாளர் ஏ.நவேஸ்வரன் அறிவித்துள்ளார்.

மேற்படி செயலமர்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.07.2017) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.15 வரை இடம்பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் ஒழுங்கமைப்பின் மூலம் ஊடகவியலாளர்களுக்கான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கருத்துரை மண்டபத்தில் இடம்பெறும் இச்செயலமர்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg